ஆயிரம் கைகள் உயரட்டும்

ஆயிரம் கைகள் உயரட்டும்
ஆண்டவர் பணியில் இணையட்டும்
தேசம் கர்த்தரை அறியட்டும்
இயேசுவின் மகிமை எங்கும் ஓங்கட்டும்
இந்தியர் மனங்களில் இயேசு என்றும் வாழட்டும்
இயேசுவின்நாமம் எங்கும் ஜெயமாகட்டும்

1. மேட்டிமை யாவும் ஒழியட்டும் – நம்
பேதங்கள் முழுவதும் மறையட்டும்
தாழ்வு மனங்கள் நீங்கட்டும்
தாழ்ந்த ஜனங்கள் உயரட்டும்
பகைமை யாவும் விலகட்டும்
பயங்கள் முழுவதும் சாகட்டும் – 4 ஆயிரம்

2. தங்கத்திருமனம் கொண்டவர் .. இத்
தரணியை மாற்றும் துாதுவர்
பணிவின் ஆவி பெற்றவர்
பரமனின் உள்ளம் கொண்டவர்
திருச்சபை வளர்ச்சி ஊழியர்
தேவனின் மகிமையைக் கூறட்டும் – 4 ஆயிரம்

3. மனித மலர்ச்சி துவங்கட்டும் – மன
பாலைவனங்கள் மாறட்டும்
பாவ உலகம் திருந்தட்டும்
கர்த்தரின் அரசு விடியட்டும்
அன்பு உருக்கம் நிலவட்டும்
ஆண்டவர் சித்தமே நடக்கட்டும் – 4 ஆயிரம்

4. தேசத்தின் எல்லைகளெங்கிலும் – நம்
தேவனின் வல்லமை விளங்கட்டும்
இந்திய மொழிகள் யாவுமே
இயேசுவை வாழ்த்திப்பாடட்டும்
ஜாதிகள் கூட்டம் கூட்டமாய்
ஆண்டவர் முன்னே பணியட்டும் – 4 ஆயிரம்



aayiram kaikal uyarattum

aayiram kaikal uyarattum
aandavar paniyil inaiyattum
thesam karthdharai ariyattum
iyesuvin makimai engkum oongkattum
inththiyar manangkalil iyesu enrum vazhattum
iyesuvin namam engkum jeyamakattum

1. meddimai yavum ozhiyattum – nam
bedhangkal muzhuvathum maraiyattum
thazvu manangkal neengkatttum
thaznthdha janangkal uyarattum
pakaimai yavum vilakattum
payangkal muzhuvathum sakattum – 4 aayiram

2. dhangkaththirumanam kondavar .. ith
dharaniyai matrrum thuthuvar
panivin aavi perravar
paramanin ullam kondavar
thirusachabai valarchi uuzhiyar
thevanin makimaiyaik kurattum – 4 aayiram

3. manidha malarchi thuvangkattum – mana
palaivanangkal marattum
bava ulakam thirunthdhattum
karthdharin arasu vidiyattum
anbu urukkam nilavattum
aandavar sithdhame natakkttum – 4 aayiram

4. thesaththin ellaikalengkilum – nam
thevanin vallamai vilangkattum
inththiya mozhikal yavume
iyesuvai vazhththibpataddum
jathikal kootam kootamay
aandavar munne paniyaddum – 4 aayiram